அன்னவாசலில் வளர்ச்சி பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Update: 2023-12-07 02:21 GMT

ஆட்சியர் ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை  மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், புல்வயல் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் செயல்பாடுகள், புல்வயல் ஊராட்சியில் செயல்படும் எம் எம் 598 பெரு மாநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கூட்டுறவு நியாய விலை கடை ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் புல் வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அரசு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. வயலோகம் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி, வயலோகம் கல்லுபூரணி ரூபாய் 13.29 லட்சம் மதிப்பீட்டில் புறனமைக்கும் பணி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் குடுமியான்மலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 2.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காளான் வளர்ப்பு பணி ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, துணை இயக்குனர் வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News