திருப்பூர் பகுதியில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் ஆய்வு.

திருப்பூர் அவிநாசி பகுதிகளில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் பார்வையாளர் வீரராக ஆய்வு செய்தார்.

Update: 2023-12-24 16:26 GMT

திருப்பூர், அவினாசி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு. தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளரின், அறிவுரையின்படி சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் தொடர்பாக, பெறப்பட்ட படிவங்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, உரிய காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேத்தம்பாளையம் மற்றும் பூலுவப்பட்டி, அவினாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுவாய் ஊராட்சி நிழலி பகுதியில் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமில் பெறப்பட்ட படிவங்களை, மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் சப்&கலெக்டர் சவுமியா ஆனந்த், அவினாசி தாசில்தார் மோகன், தனி தாசில்தார் (தேர்தல்) தங்கவேல் மற்றும் தேர்தல் துணை தாசில்தார் ரம்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News