சூர்யா புக் பார்க் சார்பில் பள்ளிக்கு ரூ.1 லட்சத்தில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா !

விழுப்புரம் சூர்யா புக் பார்க் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விழுப்புரம் பீமநாயக்கன்தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-04-26 05:33 GMT

சூர்யா புக் பார்க்

விழுப்புரம் சூர்யா புக் பார்க் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விழுப்புரம் பீமநாயக்கன்தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் சூர்யா புக் பார்க் நிறுவனர் வினித் கலந்துகொண்டு பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கான இருக்கைகள், மேஜைகள் மற்றும் இரும்பு பீரோ ஆகியவற்றை வழங்கினார்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ரகு, உதவி தலைமை ஆசிரியர் குணசேகரன், கணித ஆசிரியர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News