அரூர் அருகே நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள்

அரூர் அருகே நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-12-31 13:39 GMT

மாவட்ட நீதிமன்றம்

தர்மபுரி மாவட்டம்,அரூர் அருகே உள்ள.ஆண்டியூர் ஆலங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கவிபாரதி(37). இவரது மனைவி செல்வி (35). இவர்களுக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்த நிலையில் கவிபாரதி குழந்தைகளுடன் சொந்த ஊர் திரும்பினார்கள்.

இந்நிலையில், மனைவியின் நடத்தை மீது,கவிபாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம், தந்தையின் துக்ககாரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, செல்வி சொந்த ஊருக்கு வந்தார்.

அப்போது, அவர் திடீரென மாயமானார். இது குறித்து. தாயார் காசியம்மாள், கோட்டப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், செல்வியை அவரது கணவர் கவிபாரதி கொலை செய்து துண்டு,துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசியது தெரியவந்தது.

இது தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவிபாரதியை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக கல்பனா ஆஜராகி வாதாடி வந்தார்.

வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட கவிபாரதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

Tags:    

Similar News