வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர யாகம்!
வரதராஜ பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-03-29 09:27 GMT
வரதராஜ பெருமாள்
திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகா யாகம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் கயிறும், அன்னதானமும் வழங்கப்பட்டது. கல்யாண லட்சுமி நரசிம்மர், வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயாருக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.