மயிலாடுதுறையில் வாள் வீச்சு போட்டி:மாணவ மாணவிகள் பங்கேற்பு

மயிலாடுதுறையில் வாள் வீச்சு போட்டியில் 10 பள்ளிகளை மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.;

Update: 2023-11-29 11:50 GMT

வாள்வீச்சு போட்டி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான, வாள்வீச்சு போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

ஸ்பேர், எப்பி, ஃபாயில் ஆகிய மூன்று விதமான சண்டைகளில், 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயது உட்பட்டோர் ,ஆகிய மூன்று பிரிவுகளில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே, தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆர்வமுடன், பங்கேற்றனர்.

வீரர் வீராங்கனைகள் பெறும், புள்ளிகள் அடிப்படையில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகள் ,அடுத்த மாதம் பெரம்பலூரில், நடைபெற உள்ள, மாநில அளவிலான வாள் சண்டை போட்டிக்கு,தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News