சின்னம் பெயர் பொருத்தும் பணி
விழுப்புரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் மற்றும் புகைப்படங்கள் பொருத்தும் பணி தொடங்கியது.
Update: 2024-04-10 10:31 GMT
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய Ballot Sheet மற்றும் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியில், வாக்காளர் வாக்குப்பதிவு செய்த சின்னத்திற்கான உறுதிச்சீட்டு பொருத்தும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில், திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வானூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய Ballot Sheet மற்றும் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியில், வாக்காளர் வாக்குப்பதிவு செய்த சின்னத்திற்கான உறுதிச்சீட்டு பொருத்தும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.