என் நாத்தனார் மீது நடவடிக்கை எடுங்க: இளம்பெண் ஆட்சியரகம் முன்பு தர்ணா

வேப்பந்தட்டடை அருகே தகராறில் ஈடுபட்ட கணவரின் தங்கை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்சியரகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.;

Update: 2024-05-28 08:51 GMT

உறவினர்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி செல்லம்மாள் வயது -48. இவர் தனது மகன் பால்ராஜ், மகள் ஜெசி மற்றும் உறவினர்ககள் சிலருடன் மே 27ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

விசாரணையில் மனோகரன் உயிரிழந்துவிட்ட நிலையில் அவரது மனைவியான செல்லம்மாளுக்கும், அவரது கணவர் மனோகரன் சகோதரியும் அய்யனார்பாளையத்தைச் சேர்ந்த குமார் மனைவி பால்மணி என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வருகிறது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக, பால்மணியும் அவரது கணவர் குமார் ஆகிய இருவரும் செல்லம்மாளின் வீட்டிற்கு வந்து தகாத முறையில் திட்டி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், செல்லம்மாளின் வீட்டு ஜன்னலை அடித்து உடைத்து, கொலை முயற்சி ஈடுபட்டதாகவும் கூறி அரும்பாவூர் காவல் நிலையத்தில், செல்லம்மாள் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அரும்பாவூர் காவல் நிலைய போலீசார் உரிய வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய அவர்களை கைது செய்யவில்லை என்று கூறி, செல்லம்மாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பெரம்பலூர் நகர போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News