தலைவாசல்: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பூமி பூஜை
தலைவாசல்: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
Update: 2024-03-15 01:29 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட மணி விழுந்தான் ஊராட்சியில், இன்று கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. அருகில் ஒன்றிய தலைவர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.