அரசு பஸ் மோதி தாலூகா அலுவலக ஊழியர் பலி!
ஓட்டப்பிடாரம் அருகே வடக்குப் பரம்பூரில் அரசு பேருந்து மோதி தாலுகா அலுவலக உதவியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
Update: 2024-01-09 05:44 GMT
அரசு பஸ் மோதி விபத்து
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கடற்கரை மகன் வேல்முருகன் (50). இவர் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் ஓட்டப்பிடாரத்தில் இருந்து புதியம்புத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். வடக்கு பரும்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது நாய் குறுக்கே வந்ததில் பைக் நிலை தடுமாறியதில், எதிரே தூத்துக்குடியில் இருந்து கந்தசாமிபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.