தமிழுக்கு தெய்வ சம்பந்தம் உண்டு – எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்

தமிழுக்கு தெய்வ சம்மந்தம் உண்டு என மதுரையில் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார்;

Update: 2024-04-16 07:49 GMT
தமிழுக்கு தெய்வ சம்பந்தம் உண்டு – எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்

 இந்திரா சௌந்தர்ராஜன்

  • whatsapp icon
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் தெய்வத்தமிழ் என்ற தலைப்பில் பேசினார் அப்போது அவர் பேசியதாவது . உலகில் 5600 க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அதில் பத்து மொழிகளில் தமிழ் மொழி இருக்கிறது. சமஸ்கிருதம் கிரந்தம் போன்றவைகள் இதில் அடக்கம். உலகத்தில் தமிழ் மொழியை மட்டும் தெய்வத்தோடு ஒப்பிட்டுப் பேசுவது வழக்கம். அதற்கு தெய்வ சம்பந்தம் உண்டு.காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரிடம் எவ்வளவோ அற்புதங்கள் அதிசயங்கள் ஆழ்ந்த ஞானம் இவை எவரிடமும் காணமுடியாத ஒரு சிறப்பாகும்.ஒருமுறை தமிழறிஞர் வாகீச கலாநிதி கி.வா.ஜகன்னாதன் மகாபெரியவரை தரிசனம் செய்ய வந்தார். அவர் ஒரு தமிழறிஞர் என்பதால் தமிழ் மொழி சார்ந்த இலக்கியங்கள் குறித்து அவருடன் பேசினார். என்றார்.
Tags:    

Similar News