செய்யனூர் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 71வது பிறந்தநாள் விழா

செய்யனூர் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 71வது பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2024-03-04 15:56 GMT

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் மத்திய ஒன்றியம் செய்யனூர் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தன ஒ.ஜோதி திமுக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் D.ராஜி மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சம்பத் ஒன்றிய கழக செயலாளர்கள் சங்கர், தினகரன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News