பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-02-27 07:21 GMT
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள திருப்பத்தூர் சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்சார்பில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட திருப்பத்தூர், சிங்கம்புணரி, காரைக்குடி, தேவகோட்டை காளையார்கோவில், இளையான்குடி பகுதிகளில் நெல் பாதிப்புகளை சரியாக கணக்கெடுப்பு செய்து வறட்சி நிவாரணம்,வழங்கிட வேண்டும். மானாமதுரை அருகே நவாத்தாவு கிராமத்தில் பல தலைமுறைகளாக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளை பெற்று வாழ்ந்து வரும் 95 குடும்பங்கள் வீடுகள் கட்டி வசித்து வரும் இடங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும். மேலப்பிடாவூர் புதுக்குளம், செய்யாளூர் கிராமங்களில் 195 ஏக்கர் புன்செய் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ள அக்ரோபார்ம் நிறுவனங்களின் பத்திரப் பதிவை ரத்து செய்து பூர்வீக விவசாயிகளுக்கு பட்டா வழங்கிட வேண்டும், சிங்கம்புணரி தாலுகாவில், வணங்காமுடிப்பட்டி, காட்டுஇடையன் கண்மாய் கிராம கோயில் இடங்களுக்கு விதிமுறைகளை மீறி வழங்கியுள்ள பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். தனியார் வேளாண்மைக் கல்லூரி ஆக்கிரமித்துள்ள கண்மாய், பாசனக் கால்வாய்கள் அரசு நிலம். நடைபாதை ஆகியவற்றை அளந்து ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திட வேண்டும். கண்டரமாணிக்கம் - திருப்பத்தூர் சாலையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பணிகளில் ஈடுபடும் பெண்களை அச்சுறுத்தும் மதுபானக் கடையை அப்புறப்படுத்திட வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News