தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம் அறிவிப்பு

தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம் அறிவிப்பு, பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முழு ஆதரவு அளிப்பதாக மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-02-27 16:52 GMT

போராட்டம் அறிவிப்பு

 பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை பகுதியில் அருகே செய்தியாளர்களை சந்தித்த பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் RVJ சுரேஷ், தெரிவிக்கையில், கடந்த பிப்ரவரி -2014 முதல் பிப்ரவரி -2024 வரையிலான பத்து ஆண்டுகளில் சுமார் 400 படகுகள் உட்பட 3179 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் பிரதமர் மோடி ஆட்சியில் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட தோல்வியினால் தமிழ்நாட்டில் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் அத்துமிரல் தாக்குதல் தொடர்கிறது.

இதில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் துறைமுகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசை படகுகளை சிறை பிடித்து படகிலிருந்த 23 மீனவர்களில், 20 மீனவர்கள் மட்டும் விடுதலை செய்து விட்டு இலங்கை நீதிமன்றம் இரண்டு படகுகள் ஓட்டுனர்களுக்கு தல ஆறு மாதங்கள் சிறை தண்டனையும், மேலும் ஒருவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதனை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் சார்பில், தமிழக மீனர்வர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிற வகையில் பாரம்பரியமாக பங்கேற்கிற கச்சத்தீவு, அந்தோனியார் கோவில் திருவிழாவை புறக்கணிப்பது எனவும் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீனவர் போராட்டத்திற்க்கு, தமிழக காங்கிரஸ் முழு ஆதரவை அளித்துள்ளது.இதற்கு பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவிப்பதாகவும் மேலும் மாவட்டத்தில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சி என்பது பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் .

நகரத் தலைவர் முகமது இப்ராஹிம், மாவட்டத் துணைத் தலைவர்கள் , நல்லசாமி, அருணாச்சலம் ஆசைத்தம்பி, வழக்கறிஞர் பிரிவு ரஞ்சித் குமார், வேப்பந்தட்டை வட்டார தலைவர் சின்னசாமி, வேப்பூர் வட்டார தலைவர் தெற்கு - செந்தமிழ்ச் செல்வன் வடக்கு விஜயகுமார் மகிளா காங்கிரஸ் மகளிர் அணி மாநில இணைச்செயலாளர் இந்திராணி. மாவட்ட செய்தி தொடர்பாளர் பாலமுருகன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கொண்டனர்.

Tags:    

Similar News