தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் நல சங்கம் பொதுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஜெயமணி ராஜன் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் 53-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் உரிமையாளர்கள் நல சங்க மாநில கௌரவ தலைவர் வி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆடு வளர்ப்போர் உரிமையாளர்கள்நல சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஆண்டு வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்தனர். இதில் தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் உரிமையாளர்கள் நல சங்க மாநில பொதுச்செயலாளர் முனுசாமி, தலைவர் குமார், செயலாளர் பாலு, பொருளாளர் உடையார், உதவி தலைவர் பெரியசாமி, உதவி செயலாளர் ஸ்ரீதர், உதவி பொருளாளர் நவநீதகிருஷ்ணன், துணை தலைவர் முருகேசன், பொருளாளர் விஜயசாமி, கள்ளக்குறிச்சி சங்க தலைவர் நம்பிசுப்பிரமனியம், செயலாளர் சேகர், பொருளாளர் குமார், கடலூர் சங்க தலைவர் கிருஷ்ணன், செயலாளர் பாண்டியன், பொருளாளர் முத்துப்பாண்டி, பெரம்பலூர் சங்க தலைவர் பூமிநாதன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, அவை தலைவர் அன்புச்செல்வன், கூட்டு அமைப்பாளர்கள் வேடியப்பன், தங்கவேல், முன்னாள் ராணுவ வீரர் நாராயணன், கருப்பையா, சிவசாமி, நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, செங்கம் நூற்றாண்டு லயன்ஸ் கிளப் தலைவர் பரசுராமன், சேதுராமன்,ராஜேந்திரன் உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட சங்க உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இதில் கால்நடை மருந்தக உரிமையாளர்கள் பலர் பங்கேற்று கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை பற்றி பங்கேற்ற சங்க உறுப்பினர்களுக்கு விளக்கம் தெரிவித்து கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்துகளை வாங்கி சென்றார்கள்.