நீதிபதி அறிக்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது : இமக கோரிக்கை

இந்து சமய விரோத போக்கோடு அளிக்கப்பட்டுள்ள நீதிபதி சந்துரு தனிநபர் விசாரணை குழு அறிக்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Update: 2024-06-24 14:39 GMT

இந்து சமய விரோத போக்கோடு அளிக்கப்பட்டுள்ள நீதிபதி சந்துரு தனிநபர் விசாரணை குழு அறிக்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.


இந்து சமய விரோத போக்கோடு அளிக்கப்பட்டுள்ள நீதிபதி சந்துரு தனிநபர் விசாரணை குழு அறிக்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "பள்ளி, கல்லூரிகளில் சாதி பிரச்சனைகளை களைவதற்காக தமிழக அரசால் நீதிபதி கே. சந்துரு தலைமையில் தனி நபர் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போது அக்குழு தங்களிடம் அளித்துள்ள அறிக்கை முழுவதும் இந்து சமய நம்பிக்கையை சீர்குலைக்கும் வண்ணம் உள்ளது.

இந்து சமய நம்பிக்கையின் அடையாளமான காப்பு, கயிறு கட்டுதல், திலகம் இடுதல், பூ வைத்தல் போன்றவைகளை தடை செய்திட வேண்டும் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட இந்து சமூக மக்கள் ஆலயங்களில் வழிபாடு நடத்தி, நம்பிக்கையின் சின்னமாக, சமயத்தின் சின்னமாக கையில் கயிறுகள் கட்டுவதும், விரதகாலங்களில் காப்பு கட்டுவதும் காலம்காலமான நடைமுறை வழக்கமாகும். மேலும் இந்துக்கள் திருநீர், சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்வது நம்பிக்கை சார்ந்த நடைமுறை வழக்கமாகும். பெண்கள் பூவைத்து கொள்வது வாழ்வியல் நடைமுறையாக உள்ளது. மேலும் பூ, திருநீர், சந்தனம், குங்குமம் திலகம் இடுவது போன்றவை அறிவியல் பூர்வமாகவும் பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடியது. நீதிபதி சந்துரு அறிக்கை மறைமுகமாக மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக உள்ளது.

மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் மத அடையாளமான சிலுவை, ஹிஜாப் போன்றவைகள் பற்றி அவ்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்துக்களின் அடையாளங்களை மட்டும் நீக்க வலியுறுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த அறிக்கையை தமிழக அரசு ஏற்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News