வணிகர் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்:தீர்மானம்
வணிகர்களை பாதுகாக்கும் முயற்சியாக வணிகர் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் பாபநாசம் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வணிகர்களை பாதுகாக்கும் முயற்சியாக வணிகர் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் பாபநாசம் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வணிகர்கள் சங்க சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வணிகர் சங்க தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது பொருளாளர் ராமராஜ் முன்னிலை வைத்தார்.
செயலாளர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்று கோரிக்கைகள் குறித்து பேசி தீர்மானங்கள் ஒப்புதல் பெறப்பட்டது கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வியாபாரிகளிடம் பாபநாசம் பேரூராட்சியால் இவ்வாண்டு முதல் பல மடங்கு தொழில் வரி,
உரிமை கட்டணம், தொழிலாளர் வரி உயர்த்தப்பட்டுள்தை திரும்ப பெற வலியுறுத்தப்படுகிது. வணிகர்களிடம் வசூல் செய்யும் வரி இனங்களுக்குரிய ரசீது வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. பிளாஸ்டிக் பொருள்கள் ஆய்வு என்ற பெயரில் கடைகளுக்கு தொடர்ந்து அபதாரம் விதிப்பதை கைவிட வேண்டுகிறோம். பாபநாசம் கடை வீதி மற்றும் கடைத் தெருவில் உள்ள மழை நீர் வடிகால் பணிகளை வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்பாடா வண்ணம்,
உடனே முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. கடைவீதியில் வணிகர்களை பாதிக்கும் வகையில் திடீர் கடைகள் தள்ளுவண்டிகடைகள் வேன் போன்றவற்றை அப்புறப்படுத்தகாவல்துறை,மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்கின்றோம். பாபநாசத்தில் இயங்கி வந்த வணிகவரி அலுவலகம் தஞ்சாவூரில் உள்ளது இதை பாபநாசத்தில் மீண்டும் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தப்படுகிது. பாபநாசம் கடை வீதியில் தொடர் திருட்டு நடைபெறுவதை காவல்துறை கவனத்தில் கொண்டு இரவு தொடர் ரோந்து பணியை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பாபநாசம் கடை தெருவில் பொதுமக்கள் மாணவர்கள் வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல காலை மாலை இரு வேலைகளிலும் காவல்துறை போக்குவரத்தை சரி செய்ய கேட்டுக் கொள்கின்றோம். உள்ளூர் வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளூர் வணிகத்தை அழிக்கும் செயலை அரசு கைவிட வேண்டுகிறோம். வணிகர்களை பாதுகாக்கும் முயற்சியாக வணிகர் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டுகிறோம்.
அரசின் நிதிநிலை வரி பட்ஜெட்டுக்கு முன்னர் வணிகர்களின் கருத்தினை கேட்டு அரசு செயல்பட கேட்டுக்கொள்கிறோம். அனைத்து வணிக நிறுவனங்களும் கண்காணிப்பு கேமரா பொருத்தி பாதுகாத்திட கேட்டுக்கொள்கிறோம் பாபநாசம் கடைவீதியில் தஞ்சாவூர் கும்பகோணம் வழி காட்டி பலகையினை பயணிகள் பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். பாபநாசம் அரசு மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகளை தங்கு தடை இன்றி இருப்பு வைக்க வேண்டும் எனவும்,
24 மணி நேரமும் செயல்படும் விதமாக மருத்துவர்கள் கூடுதலாக நியமனம் செய்ய வேண்டும் எனவும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாபநாசத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது இக்கூட்டத்தில் அனைத்து வணிகர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
முடிவில் பாபநாசம் வணிகர் சங்க செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் நன்றி கூறினார். பட விளக்கம் பாபநாசத்தில் வணிகர்கள் சங்க