தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தின் டீசர் இஸ்லாமியர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.;

Update: 2024-02-22 00:59 GMT
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம்

  • whatsapp icon

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் என்கிற திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், சிறுபான்மையினர் மக்களை தொடர்ந்து வஞ்சிக்கின்ற தமிழ் படங்களை கண்டித்தும் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். இதில் அமரன் படத்தை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்களை கைகளில் ஏந்தி நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணை செயலாளர்கள் பூபதி, ஆசிம் மற்றும் நிர்வாகி நிஜாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News