தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கருப்பு பட்டை அணிந்தவாறு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2024-02-05 04:47 GMT

கருப்பு பட்டை அணிந்தவாறு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோட்டை மைதானத்தில் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சங்கத்தின் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நல்லம்மாள் மாவட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 30க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சங்கத்தின் மாவட்ட செயலாளர் மதியழகன் கூறும்போது அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும், ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 12 அம்ச கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதாக கூறிய அரசு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது, சிபிஎஸ்சி ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், எமிஸ் பணியில் ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் ஆனால் இதுவரை தமிழக அரசு செவிசாய்க்காமல் உள்ளது எனவே தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

Tags:    

Similar News