தமிழக வெற்றி கழக ஆலோசனை கூட்டம்
ஊத்தங்கரையில் தமிழக வெற்றி கழக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-19 12:17 GMT
தமிழக வெற்றி கழக ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் முதலாவது ஆலோசனை கூட்டம் மற்றும் பூத் உறுப்பினர்களை நியமனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவரும் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான தாமோதரன் தலைமையில் ஊத்தங்கரை ஒன்றிய தலைவரும் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி துணை ஒருங்கிணைப்பாளருமான தர்மன் முன்னிலையில் ஊராட்சி, கிளை, வார்டு மற்றும் பூத் உறுப்பினர்கள் நியமனம் செய்ய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.