தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கணபதி அக்ரகாரம் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொருளாளர் அருணாசலம் தலைமையில் நடைபெற்று . பாபநாசம் ஒன்றிய பொருளாளர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார் .மாவட்ட துணை செயலாளர் ராஜன் பாபநாசம் ஒன்றிய தலைவர் சிவலிங்கம் கணபதி அக்ரகாரம் கிளை தலைவர். ரவி கிளை செயலாளர் ** ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சங்கத்தின் மாநில தலைவர் கே.எஸ் முகமது இப்ராஹிம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட பொருளாளர் தகேசவன் மாவட்ட துணை தலைவர் வீராசாமி வடக்கு மாவட்ட துணை தலைவர் சின்னகுஞ்சி தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பாஸ்கர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் இந்திரா மகளிர் அணி செயலாளர். பிரமா மற்றும் மாவட்ட வட்டார ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 1.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நடத்த விஷ சாராயத்தால் 55மேற்பட்டவர்கள் உயர் இழந்த சம்பவங்கள் தமிழக மக்களை மிகவும் வேதனை அடைய செய்து உள்ளது தமிழக அரசு அலட்சியப்படுத்தமல் கள்ள சாராயம் விற்ற கும்பல் மீது கடுமையான சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தமிழகத்தில் இனியும் இது போன்ற சம்பவங்கள் நடைப்பெறாது தமிழக முழுவதும் மது விலக்கை அமுல்படுத்தக் தமிழகத்தில் கள்ள விஷ சாராயத்தை ஒழிக்க வேண்டும் எனவும் உடனடியாக கள்ளுக் கடைய திறக்கச் ஏற்பாடு செய்ய வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது
2.தஞ்சாவூரில் காவிரி பாதுகாப்பு மாவட்ட மாநாட்டை வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவது எனவும் மூத்த விவசாயிகள் விருது வழங்குவது என்றும் சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
3.தமிழகத்தில் வழக்கமாக ஜூன் மாத தமிழக அரசு தண்ணீர் திறப்பது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் தண்ணீர் திறக்கச் காலதாமதம் ஆகிறது மேலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு படி ஏற்கனவே வழங்க வேண்டி 90 டி எம் சி தண்ணீரையும் மாதம் வழங்க வேண்டிய 10 டி எம் சி தண்ணீரையும் வழங்க மறுக்கும் கர்நாடக அரசை ஒன்றிய அரசையும் இக்கூட்டம் வண்மையாக கண்டிக்கிறது மேலும் தமிழக டெல்டா காவிரி பாசன விவசாயிகளின் நலன் கருதி சம்பா சாகுபடிக்காவது உச்சநீதிமன்றம் தீர்ப்பு படி மற்றும் காவிரி ஆணையம் உத்தரவுப்படி தண்ணீர் பெற உரிய போர்கால நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வழியூர்த்தி ஒன்றிய கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட அஞ்சல் நிலையம் அருகில் வரும். 5.7.2024 அன்று ஒரு நாள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
4.தற்போது பெய்த கன மழையால் கோடைகால நெல் பயிர்கள் அறுவடை கதிர்கள் முழுவதும் தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்ட உள்ளது அதுபோல எள்ளு பருத்தி மிளகாய் வாழை வெற்றிலை பயிர்கள் மழையில் நனைத்து பாதிக்கப்பட்டுவுள்ளது எனவே விவசாயிகள் நிலை கருதி மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வழியுர்த்திக் கேட்டுக் கொள்கிறது
5.பாபநாசம் வட்டம் கணபதி அக்ரகாரம் கிராமத்தில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியால் திறக்கப்பட்ட நியாய விலை புதிய கட்டியிடம் பூட்டியே கிடப்பதால் கிராம மக்கள் மிக பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள் இதனால் கிராமத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பாடு கிறது எனவே பொது மக்கள் நலன் கருதி பூட்டி கிடக்கும் புதிய நியாய விலை கட்டியிடத்தை திறந்து மக்கள் பயன் பாடுக்கு கொண்டு வர வேண்டும் என இது சம்பந்தமான துறை அதிகாரிகளை யும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களையும் இக்கூட்டம் வழியுர்த்திக் கேட்டுக் கொள்கிறது
6.ஒன்றிய அரசின் அலட்சியத்தால் நீட் தேர்வில் விடைதாள் வெளிவரப்பட்டது இதனால் மருத்துவ படிக்கும் பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவி கள் பாதிக்கப்பட்டுவுள்ளார்கள் எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இக்கூட்டம் ஒன்றிய அரசை வழியுர்த்திக் கேட்டுக் கொள்கிறது
7.பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில் அஞ்சல் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கேட்டை அடிக்கடி மூடப்படுவதால் அந்த வழியாக சாலியமங்கலம் தஞ்சாவூர் அம்மா பேட்டை திருவாரூர் போன்ற முக்கிய நகரங்கலுக்கு தினமும் எப்போதும் அரசு பேருந்துகள் தனியார் வாகனங்கள் பள்ளி கல்லூரி வாகனங்கள் நோயாளிகள் ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்கிறது எனவே இப்பகுதி பொது மக்கள் சார்பாக நீண்ட நெடுங்கால கோரிக்கையான பாபநாசம் புதிய பேருந்து அருகில் அதாவது அஞ்சல் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கேட்டில் உடனடியாக உயர் மட்ட மேம் பாலம் கட்டியிட வேண்டுமென ரயில்வே துறை மற்றும் தமிழக அரசை இக்கூட்டம் வழியர்த்திக் கேட்டுக் கொள்கிறது மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முடிவில் கணபதி அக்ரகாரம் கிளை பொறுப்பாளர் சேகர் நன்றி கூறினார்