நாமக்கல்லில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில உரிமை மீட்பு மாநாடு
நாமக்கல்லில் இன்று நடைபெறும் தமிழ் புலிகள் கட்சியின் மாநில உரிமை மீட்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
Update: 2024-03-03 08:46 GMT
நாமக்கல் சேலம் சாலையில் அமைந்துள்ள பொம்மை குட்டை மேடு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் -3)தமிழ் புலிகள் கட்சியின் மாநில உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி , நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N. ராஜேஷ்குமார் எம்.பி ஆகியோர் கலந்து கொள்வார் என அந்த கட்சியின் மாநில தலைவர் நாகை.திருவள்ளுவன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.