அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா
Update: 2023-12-03 08:59 GMT
தமிழ் சங்க விழா
ரிஷிவந்தியம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் பிரதமர் நேரு, அன்னை இந்திரா, கலைவாணர் என்.எஸ்.கே., உவமைக் கவிஞர் சுரதா பிறந்த நாள் மற்றும் 191வது தொடர் சொற்பொழிவு என ஐம்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு பாரதியார் தமிழ் சங்க தலைவர் துரைமுருகன் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தமிழ் சங்க தலைவர் ராசகோபால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் துரைராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலையரசி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை தமிழ்க்கொடி வரவேற்றார். நிகழ்ச்சியில், இலக்கிய இன்பம்,குழந்தைகள் தினம், உலக பெண் குழந்தைகள் தினம், உலக ஆண்கள் தினம் உட்பட பல்வேறு தலைப்புகளில் குணசேகரன், செல்லமுத்து,முத்தமிழ்முத்தன், ஜெயராமன்,தனலட்சுமி, வெங்கடாசலம், மாரியம்மாள் பேசினர்.