தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து தொல். திருமா தேர்தல் பரப்புரை

தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து தொல். திருமா தேர்தல் பரப்புரை

Update: 2024-04-12 05:32 GMT

தேர்தல் பிரச்சாரம் 

நேற்று தென் சென்னையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் .

விருகம்பாக்கம் - எம்.ஜி.ஆர் நகரில், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகிய தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வாக்கு சேகரித்தார்.மீனவ கிராமங்களான சின்ன நீலாங்கரை குப்பம் முதல் நைனார் குப்பம் வரையிலான ஏழு ஊர்களில் பிரசாரம் செய்து தி.மு.க.,வுக்கு ஆதரவு திரட்டினார்.

பரப்புரையின் போது பேசிய தொல். திருமாவளவன் 10 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. குறைகள் மட்டுமே கூறி தமிழ்நாட்டில் அரசியல் செய்துவிட முடியாது என பாஜகவை விமர்சித்து பேசினார் .

Tags:    

Similar News