சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சுவாமி தரிசனம்
Update: 2023-12-21 04:45 GMT
கவர்னர் சுவாமி தரிசனம்
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று இரவு புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்தார். அவரை கோவில் பொதுதீட்சிதர்களின் சங்க செயலாளர் சிவராம தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் கனகசபை மீது ஏறி சிவகாம சுந்தரி சமேத நடராஜரையும், அருகே உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாளையும் சுவாமி தரிசனம் செய்தார்.