தமிழ்நாடு சிலம்பாட்ட கழக மாவட்ட செயலாளர் தேர்வு
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜயனுக்கு சக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.;
Update: 2024-03-14 05:03 GMT
வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக சேலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட செயலாளராக சேலத்தை சேர்ந்த சி.விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அதற்கான நியமன கடிதத்தை அகில இந்திய சிலம்பாட்ட சங்க தலைவர் ராஜேந்திரன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் விஜயனுக்கு, சிலம்பாட்ட கழக நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். சேலம் அழகாபுரம் சிவாயநகரில் வருகிற 17-ந் தேதி சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழக ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடக்கிறது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள் என்று மாவட்ட செயலாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.