தமிழக வெற்றிக்கழகம் நல உதவி பொருட்கள் பறிமுதல்
நீரோடி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பொதுமக்களுக்கு வழங்கிய பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-28 16:20 GMT
பொருட்கள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி மீனவ கிராமத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பொதுமக்கள் ஏராளமான வந்தனர். இது குறித்த தகவல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் எந்தவித நல உதவிகளும் வழங்கக் கூடாது என நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினார்.
பின்னர் பொதுமக்களுக்கு வழங்க இருந்த அரிசி பருப்பு, காய்கறி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர் இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.