வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர், சின்னம் பொருத்தும் பணி
ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் சின்னம் ஆகியவற்றை மின்னணு இயந்திரங்களில் பொருத்தி சீல் வைக்கும் பணியில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டனர்.;
Update: 2024-04-12 05:13 GMT
வாக்கு பதிவு இயந்திரம்
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. 343 எந்திரங்கள் மற்றும் 372 விவி பேட் உள்ளிட்டவர்களை ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான பிரியதர்ஷினி மேற்பார்வையில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது கள்ளக்குறிச்சி மக்களவைப் தொகுதியில் 22 வேட்பாளர்கள் களம் காண உள்ளனர்.