டாஸ்மாக் முற்றுகை போராட்டம் வாபஸ்

சந்தைப்பேட்டையில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி பாமக., சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் வட்டாட்சியரின் சமாதான பேச்சால் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2024-01-08 12:30 GMT

சந்தைப்பேட்டையில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி பாமக., சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் வட்டாட்சியரின் சமாதான பேச்சால் வாபஸ் பெறப்பட்டது.

திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை கனகனந்தல் சாலையில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடைகளை அகற்ற வலியுறுத்தி பாமக சார்பில் நாளை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் வட்டாட்சியர் மாரியாபிள்ளை தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டம் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த சமாதான கூட்டத்தில் திருக்கோவிலூர் காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் , பாமக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ராஜ்குமார் உடன் இருந்தனர்.

Similar News