டாஸ்மாக் விடுமுறை: ஒரே நாளில் ரூ. 6.25 கோடிக்கு மது விற்பனை
மக்களவை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் குமரியில் நேற்று ஒரே நாளில் ரூ.6.25 கோடிக்கு மது விற்பனையானது.
Update: 2024-04-18 05:02 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 100 டாஸ்மாக் மது கடைகள் உள்ளன. இந்த இவற்றின் மூலம் தினமும் 2 கோடி முதல் 3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகி வருகின்றன. இந்த அதிகபட்சமாக சில நேரங்களில் ஐந்து கோடி வரை மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம். இந்த நிலையில் தேர்தல் காரணமாக மூன்று நாட்கள் மது கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து தேர்தல் முடிவு வரை மதுக்கடைகள் திறக்கப்படாது. இதனால் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் உள்ள மது கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தில் உச்சபட்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 6.25 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.