வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்
வரும் 4ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்படுகிறது. அதன்படி சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 4-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்படுகிறது.
அதே போன்று மதுபான பார்கள் மற்றும் எப்.எல்.1 முதல் எப்.எல்.11 வரை அனைத்து கடைகளும் மூட வேண்டும். அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3 ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஓட்டல், கிளப்புகளில் செயல்பட்டு வரும் மதுபானகூடங்கள், டாஸ்மாக் கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்கள் என அனைத்தும் மூட வேண்டும். மீறினால் மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.