டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு 48 மது பாட்டில்கள் திருட்டு
நன்னிலம் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு 48 மது பாட்டில்கள் திருட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-31 06:37 GMT
மதுபாட்டில்கள் திருட்டு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கீழப்பனங்குடி கிராமத்தில் டாஸ்மாக் மது கடை இயங்கி வருகிறது. விற்பனை முடிந்த பின் கடை ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கடையில் உள்ளே சென்று பார்த்த போது, ரூபாய் 12 ஆயிரத்து 750 மதிப்புள்ள 48 மது பாட்டில்கள் திருட்டு போனது தெரியவந்துள்ளது. இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் .மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.