டாடா ஏஐஏ லைஃப் இன்ஷியூரன்ஸ் நிறுவனத்தின் 23ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இரத்த தான முகாம்
Update: 2024-02-10 10:42 GMT
டாடா ஏஐஏ லைஃப் இன்ஷியூரன்ஸ்
டாடா ஏஐஏ லைஃப் இன்ஷியூரன்ஸ் நிறுவனத்தின் 23ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்று வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் டாடா ஏஐஏ லைஃப் இன்ஷியூரன்ஸ் நிறுவனத்தின் நாமக்கல் கிளை சார்பில் இன்று (10.02.2024) காலை 10 மணிக்கு இரத்ததானம் முகாம் நடைபெற்றது. நிறுவனத்தின் முகவர்கள், குழுத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் ரத்த தானம் வழங்கினர். ரத்ததானம் கொடுத்தவர்களுக்கு டாடா ஏஐஏ லைஃப் இன்ஷியூரன்ஸ் வழங்கும் நினைவுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.