ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Update: 2024-02-11 02:49 GMT

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி தவ்ஹீத் ஜமாத் சார்பில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தியும், பாஜக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். 1991 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்புச்சட்டம் , . இந்திய நாடு சுதந்திரம் பெறும் போது எந்தெந்த வழிபாட்டுத்தலங்கள் எப்படி இருந்தனவோ அவை அப்படியே தொடர உத்தரவாதம் அளித்தது ஆனால் அதற்கு மாற்றமான நடவடிக்கைகளில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது, ஜனநாயகமும், சட்ட நெறிமுறைகளும் குழி தோண்டி புதைக்கப்படும் இக்கால கட்டத்தில் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலும் அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News