துண்டு பிரசுரங்களை வழங்கி வரிவசூல் செய்யும் பணி
வரி செலுத்தாத தொழிற்சாலைகள், கடைகள், வணிக வளாகங்கள் வரி, குடியிருப்புகள் ஆகியவற்றிக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வரிவசூல் செய்யும் பணி.
Update: 2024-02-22 06:39 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகராட்சியில் தமிழகத்தில் தன்னிறைவு அடைந்த நகராட்சியாக திகழும் நிலையில், இந்நகராட்சியில் பன்னாட்டு தொழிற்சாலைகள் முதல் சிறிய அளவிலான தொழிற்சாலைகள் என 555 தொழிற்சாலைகள், 657 கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் 22504 குடியிருப்புகள் ஆகியவற்றிலிருந்து, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாளச் சாக்கடை, கடை வாடகை, தொழில் வரி உள்ளிட்ட பிற இன வரிகள் என நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகை 27. 18 கோடி நிலுவையில் உள்ளதை தொடர்ந்து. மறைமலை நகராட்சி சார்பில் கடந்த பத்து நாட்களாக வரிவசூல் செய்யும் பணியில் மூன்று கோடி ரூபாக்கு மேல் வரிவசூலிக்கப்பட்டுள்ள நிலையில். மேலும் நிலுவையிலுள்ள 27. 18 கோடி ரூபாய் வரியினை உடனடியாக பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்தக்கோரி, நகராட்சி ஆணையர் சௌந்தராஜன், நகராட்சி பொறியாளர் செல்வராஜ், இணை பொறியாளர், பொதுப்பணி மேற்பார்வையாளர், வருவாய் ஆய்வர்கள், வருவாய் உதவியாளர்கள், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நகராட்சி முழுவதுமுள்ள வரி செலுத்தாத தொழிற்சாலைகள், கடைகள், வணிக வளாகங்கள் வரி, குடியிருப்புகள் ஆகியவற்றிக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வரிவசூல் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.