நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரி வசூல் பணி தீவிரம்
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் உத்தரவுபடி ஊழியர்கள் வரி வசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Update: 2024-03-30 03:54 GMT
தர்மபுரி நகராட்சியில் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கடைகள், நகராட்சி முழுவதும் உள்ள வீடுகள் வணிக நிறுவனங்கள் என 24ஆயிரம் வருவாய் இனங்கள் உள்ளன. இவற்றில் இருந்து வீட்டு வரி, குழாய் வரி, பாதாள சாக்கடை வரி, தொழில் வரி, குத்தகை வாடகை உள்ளிட்ட பல்வேறு இனங்கள் மூலம் வரி, வாடகை வசூல் செய்யப்படுகிறது. நடப்பாண்டில் நிலுவை வரி வாடகை வாடகையாக 1.14 கோடி நிலுவையில் உள்ளது. நடப்பாண்டில் மார்ச் மாதம் முடிய, இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், தர்மபுரி நகராட்சி கமிஷனர் புவனேஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து, வீடு வீடாக வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.