சாப்பிட்டுக் கொண்டிருந்த டீ மாஸ்டர் திடீர் உயிரிழப்பு
திங்கள்சந்தையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த டீ மாஸ்டர் திடீர் உயிரிழப்பால் பரபரப்பு.
Update: 2024-03-20 11:56 GMT
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஆறுமுக பாண்டி என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் அங்குள்ள உறவினரான செல்வராஜ் என்பவர் வீட்டில் தங்கி வந்தார். இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து இரவு சுமார் 11 மணியளவில் ஆறுமுகபாண்டி வீட்டு வராண்டாவில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்துள்ளனர். ஆனால் அதற்குள் ஆறுமுகபாண்டி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுகபாண்டி மாரடைப்பால் இறந்தாரா? அல்லது அவரது மரணத்திற்கு வேறு காரணம் உண்டா என்பதை குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை. இந்த தகவல் குறித்து திருச்செந்தூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகே எப்படி இறந்தார் என்று தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.