பேருந்துகளை இயக்க தேயிலை தோட்ட பணியாளர்கள் எதிர்பார்ப்பு
மாஞ்சோலை பகுதியில் அரசு பேருந்து இயக்கப்பட வேண்டும் என தேயிலை தோட்ட பணியாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.;
Update: 2024-01-02 06:20 GMT
அரசு பேருந்து
நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17,18 ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் மணிமுத்தாறிலிருந்து மாஞ்சோலை செல்லும் மலை சாலை கடுமையாக சேதமடைந்தது.இதையடுத்து மாஞ்சோலை தேயிலை தோட்டங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து நிறுத்தப்பட்டது. தற்போது மழை நின்று இரண்டு வாரங்களுக்கும் மேலான நிலையில் மாஞ்சோலை பகுதிக்கு உடனடியாக அரசு பேருந்து இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலை தோட்ட பணியாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.