மாணவனுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா் கைது
திருச்சியில் மாணவனுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக பள்ளி ஆசிரியரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.;
கோப்பு படம்
திருச்சி கருமண்டபம் ராம் நகரைச் சோ்ந்தவா் ஐன்ஸ்டீன் பாலா (55). இவா், திருச்சியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
கடந்த நவம்பா் மாதம் இவரது வகுப்பில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவரை தனது வீட்டுக்கு டியூஷன் கற்றுக்கொள்ள அழைத்து, பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக, அந்த மாணவன், பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க, பெற்றோா் திருச்சி குழந்தைகள் நலக்குழுவிடம் புகாா் அளித்தனா்.
குழந்தைகள் நலக்குழுவின் விசாரணைக்குப் பிறகு மாநகரக் காவல் ஆணையரிடம் அறிக்கை அளித்தனா். அதனடிப்படையில், திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, பள்ளி ஆசிரியா் ஐன்ஸ்டீன் பாலாவை சனிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.