அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு சிறை
Omalur;
Update: 2023-11-23 05:26 GMT
ஆசிரியர் மயில்வாகனன்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள எம் செட்டிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் சுமார் 50 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரியும் மயில்வாகனன்(50) 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் மயில்வாகனன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.