தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி ஆசிரியர்கள் போராட்டம்

மயிலாடுதுறையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2024-02-26 07:09 GMT

ஆர்ப்பாட்டம் 

Ssta protest மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதி 311-இல் கூறியவாறு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடர் முற்றுகை போராட்டத்தில் ஆசிரியர்களை கைது செய்வதைக் கண்டித்தும், விரைவாக சம ஊதியம் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைகளில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News