அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்
அரியலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-04 16:19 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்
அரியலூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் இன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொடக்ககல்வி துறை ஆசிரியர்களை பெரிதும் பாதிக்கும் அரசாணை 243 யை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தபட்டது.
மேலும் டிக்டோ-ஜாக் பேச்சு வார்த்தையில் ஏற்றுகொண்ட 12 அம்ச கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிட வேண்டியும் கோஷமிடபட்டது. மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்ரவரி 19 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கபட்டது.
இதில் அச்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.