பைக் திருடிய வாலிபர் கைது: 2 பைக்குகள் பறிமுதல்!

தூத்துக்குடியில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-05-28 03:06 GMT

பைல் படம் 

தூத்துக்குடி பி அன்டு டி காலனி 12வது தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் பொன்ராஜ் (31). இவர் கடந்த 13ஆம் தேதி மணி நகர் 1வது தெருவில் நிறுத்தி இருந்த அவரது பைக் திருடுபோய்விட்டது. இது குறித்து அவர் மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதேபோல் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த காமாட்சி மகன் ரவிசங்கர் (55). கடந்த 2ஆம் தேதி திரவிய புரம் ரோட்டில் நிறுத்தியிருந்த இவரது பைக் திருடுபோய்விட்டது. இது குறித்து புகாரின் பேரில், தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement

இந்நிலையில், மத்திய பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகர் முதல் தெருவை சேர்ந்த அபூபக்கர் மகன் சேக் முகமது (25) என்பதும், அவர் பைக்குகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News