பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

சமயபுரத்தில் மதுபான பாரில் இரண்டு வாலிபர்களுக்கிடையே ஏற்பட்ட தகறாறில் பீர் பாட்டிலால் கழுத்து மற்றும் தலையில் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update: 2024-05-01 04:30 GMT

காவல் நிலையம் 

திருச்சி மாவட்டம் சமயபுரம்,மாடக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 28 வயதான அஜித். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதுடைய விஜய் இவரும் ஆட்டோ ஓட்டுநர்.இவர்கள் இருவருக்கும் நேற்று இரவு சமயபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபான தொழிற்சாலைகளுக்குகடையில் மதுபானம் வாங்குவதில் தகராறு ஏற்பட்டது. மதுபான கடை பாரில் இருவரும் மது அருந்திய போது மீண்டும் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதில் கோபமடைந்த விஜய் உருட்டு கட்டையால் அஜித்தின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அஜித் கையில் வைத்திருந்த பாட்டிலால் விஜய் தலை மற்றும் கழுத்து பகுதியில்  குத்தியதில் விஜய் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News