கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது!
கஞ்சா விற்ற வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-03 04:54 GMT
கலெக்டர் சுப்புலெட்சுமி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் யாதமரி அருகே உள்ள குப்பூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மணிகண்டன் (23). இவர் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா கடத்தி வந்து குடியாத்தம் பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனால், கடந்த மாதம் குடியாத்தம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார், சைனகுண்டா சோதனைச்சாவடி அருகே கஞ்சா கடத்தி வந்த மணிகண்டனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்பி மணிவண்ணன் பரிந்துரையின் பேரில் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவை சேலம் மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினார்கள்.