இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
தொப்பூர் அருகே ராமதாஸ் நகர் பகுதியில் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-04-13 03:15 GMT
கஞ்சா கடத்தியவர் கைது
தர்மபுரி மாவட்டம் ,தொப்பூர் அருகே ராமதாஸ் நகர் பகுதியில் தொப்பூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவலர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இது தொடர்பாக சேலம் மாவட்டம், கைகாட்டி வெள்ளார் கிராமத்தை சேர்ந்த மோகன்குமார் வரை காவலர்கள் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் இவருக்கு கஞ்சா சப்ளை செய்து மேச்சேரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.