வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் தற்கொலை

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் விரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,

Update: 2024-03-17 11:20 GMT

தற்கொலை

கரூர்,காந்திகிராமம் கம்பன் பஸ்ட் கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் தியாகராஜன் வயது 35. தியாகராஜனுக்கு கடந்த 2- வருடங்களாகவே வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆயினும் ,அவருக்கு குணமாகவில்லை. இதனால் விரக்தி ஆன மனநிலையோடு வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மார்ச் 14ஆம் தேதி இரவு 10 மணியளவில், பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இந்த சம்பவம் அறிந்த அவரது தாயார் மல்லிகா வயது 57 என்பவர், உடனடியாக தியாகராஜனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த தியாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக உயிரிழந்த தியாகராஜனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News