வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தெள்ளார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-03-25 08:56 GMT
காவல்துறை விசாரணை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரது மகன் பாரதிதாசன்(22). இவருக்கு அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்பட்டு வந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனவேதனையில் இருந்த பாரதிதாசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாரதிதாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தெள்ளார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.