காதலி பேசாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
சேலத்தில் காதலி பேசாத விரக்தியில் வெள்ளிபட்டறை தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், அம்மாப்பேட்டை ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 25). வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவர், பச்சப்பட்டி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சரத்குமாரிடம் அவரது காதலி பேசவில்லை. இதன் காரணமாக விரக்தி அடைந்த அவர் கடந்த 29-ந் தேதி வீட்டிற்கு சென்று அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சரத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காதலி பேசாததால் விரக்தி அடைந்த சரத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இருப்பினும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.