குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை

தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவில் அருகே வாலிபர் பூச்சி மருந்து குடித்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-22 09:59 GMT
தற்கொலை 

தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவில் அருகே ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த கடல்பாண்டி மகன் கார்த்திக் (25) என்ற வாலிபர் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் பார்த்து வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார், இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற போலீசார் வாலிபரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News